Call US :- 75508 75508

ABOUT US

Senthil Kumar.V Founder Sathyam Groups

"15 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய பயணம்... மதுரை நகர வீதிகளில் நடந்து செல்லும் இளைஞன். வேகமாய் கடந்து செல்லும் வாகனங்கள்... ஓட்டமும், நடையுமாய் பறந்து கொண்டிருக்கும் பாதசாரிகள்... எதை நோக்கி நாம் செல்லப்போகிறோம். நல்ல வேலை கிடைத்துவிட்டால் நாமும் சீக்கிரமே செட்டிலாகி விடலாம் என்கிற சராசரி இளைஞனுக்குரிய என்ற சிந்தனை ஓட்டங்கள் ஆழ் மனதுக்குள் துரத்திக்கொண்டிருக்க செந்தில்குமார் என்கிற அந்த இளைஞன் ஆயிரமாயிரம் கேள்விகளோடு எதிர்நடை போடுகிறார்... எதுவாக நீ நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிற கீதையின் வரிகள் சிந்தையில் பொறி கிளப்புகிறது. சின்னஞ்சிறு வயதில் கிராமத்து வயல்வெளிகளில் ஓடியாடியது நினைவுகளில் கரைபுரண்டோடுகிறது. பச்சை பசேலென பூத்துக்குலுங்கிய வயல்கள், இன்று வறண்ட பூமியாய் மாறிக்கிடப்பது மின்னலாய் வந்து போகிறது. மனம் ஒரு கணம் கனத்துப்போகிறது. நமக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான் தானே. செந்தில்குமாருக்குள்ளும் அந்த கிராமத்தானின் குரல் கேட்கத்தான் செய்தது... ‘எனக்காக, நீ என்ன செய்யப்போகிறாய் மகனே?’& இது பூமித்தாயின் வேதனைக்குரல். ஏதாவது செய்ய வேண்டும்... என்ன செய்யலாம் என்ற கேள்வியின் ஊடே, ‘மாத்தி யோசி’ என்கிற மந்திரக்குரல். யோசித்தார்... கெமிக்கல் கலங்களாய் மாறிப்போன, நிலங்களை, மீண்டும் விளைநிலங்களாய் மாற்ற இயற்கையை யாசித்தார். கடல் வழித்தாவரங்கள் மூலம் இயற்கை உரங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். அதன் வழிமுறைகளை அறிந்து கொள்ள கடல் வாழிடங்களுக்கே தேடிச்சென்றார். அனேக அதிசயங்களை கொண்டிருக்கும் கடல்தான் நமக்கான விடை என்பதை புரிந்து கொண்டார். செயலில் இறங்கினார். அங்கேயும் வந்தது சிக்கல். மூலதனம் இல்லாத தொழில் எது? தேர்ந்தெடுத்திருப்பதோ புதிய துறை. கையில் இருப்பதோ சிறு தொகை. கொடுத்து உதவுவதற்கும் ஆளில்லா சூழல். மனம் தளரவில்லை செந்தில்குமார். இருக்கிற தொகையில் கொறஞ்ச பட்ஜெட்டில் இறங்கி பாத்துடலாம் என துணிந்தார். தொழிலில்¢ நேர்மையும், உண்மையும் வாழ்வின் துணை என்ற நம்பிக்கையுடன் 2004&ல் ‘சத்யம் பயோ’ நிறுவனத்தை தொடங்கினார்

Read More

We are Trusted

உண்மை.

We are Professional

உழைப்பு.

We are Expert

உயர்வு .